பாலியல் புகாரில் சிக்கி கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ள சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது பெண் எஸ்.பி. அளித்த புகாரின் அடிப்படையில், அவர் மீது விசாரணை நடத்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
விசாரணை குழு அமைக்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கம், டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது விரிவான விசாரணை நடத்தக் கோரியுள்ளது.
காவல்துறை பணியிடங்களில் பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு, ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கம் எப்போதும் துணை நிற்கும் என்றும் கூறியுள்ளது.