திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நல்ல முறையில் இணக்கமாக நடந்ததாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் K.S.. அழகிரி தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தைக்குப்பின் சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் தினேஷ் குண்டுராவ், ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்டோர், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி - தொகுதி பங்கீடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதித்தனர்.
இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய K.S. அழகிரி, காங்கிரஸ் தலைமையுடன் கலந்தாலோசித்து முடிவை அறிவிப்போம் என தெரிவித்தார்.