எந்த ஒரு விலங்கையும் வதம் செய்யாமல், சைவ முறைப்படி சாமி கும்பிடுங்கள் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கேட்டுக் கொண்டுள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திருவிழா காலங்களில் முயல்களை வேட்டையாடி சாமி கும்பிடுவதற்கு மீண்டும் அனுமதி அளிக்க வேண்டும் என மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சீனிவாசன், வன விலங்குகளை கொல்வதற்கும், வதம் செய்வதற்கும் யாருக்கும் அதிகாரம் கிடையாது என திட்டவட்டமாக கூறியதோடு, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதிகளில் சுற்றித்திரியும் மான்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.