இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி புதுச்சேரி மற்றும் கோவையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்கிறார்.
டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வரும் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி விமான நிலையம் செல்கிறார்.
பின்னர் சாலை மார்க்கமாகச் சென்று, ஜிப்மர் மருத்துவமனை கலையரங்கில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்ள உள்ளார். விழாவுக்கு பின் காரில் சென்று லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் மதியம் நடைபெறும் பா.ஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுகிறார்.
தொடர்ந்து புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்பும் பிரதமர் மோடி, அங்கிருந்து தனி விமானம் மூலம் கோவைக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
தொடர்ந்து, கொடிசியா வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று பல்வேறு துறைகளின் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
மேலும், முடிக்கப்பட்ட பல திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். பின்னர் மாலை பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று மோடி உரையாற்றுகிறார்.
பிரதமர் வருகையை ஒட்டி கொடிசியா வளாகம் மற்றும் மைதானப் பகுதியில் ஆயுதம் ஏந்திய போலீஸார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தேச வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்களிப்பு குறித்து இந்தியா பெருமை கொள்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இன்று பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க பிரதமர் மோடி கோவை வர உள்ள நிலையில் அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது என்றும், தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்பதில் மத்திய அரசு பெருமைப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு திட்டங்களை துவக்கி வைப்பதற்காக கோவை வருவதாக தமிழில் பதிவிட்டுள்ளார்.
class="twitter-tweet">தேச வளர்ச்சிக்கு தமிழ் நாட்டின் பங்களிப்பு குறித்து இந்தியா பெருமை கொள்கிறது. தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது. தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்பதில் மத்திய அரசு பெருமைப் படுகிறது. பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக நாளை கோயம்புத்தூரில் இருப்பேன்.
— Narendra Modi (@narendramodi) February 24, 2021