தமிழ்நாட்டில், மக்களுக்கான நலத்திட்டங்களை முன்னெடுக்கின்ற ஒரே ஆட்சியாக, ஆளும் அதிமுக அரசு விளங்குவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட எழில் நகரில், அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய முதலமைச்சர், தமது ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என எதிர்க்கட்சியினர் பொய் பரப்புரை மேற்கொள்வதாக குற்றம்சாட்டினார்.
பொதுமக்கள் மத்தியில் மேடை போட்டு, ஆளும் அதிமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டுப் பேச தாம் தயார் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.