மின்வாரியத்துக்கு நிலக்கரி இறக்குமதி செய்வதற்கான ஆயிரத்து 330 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரை ரத்து செய்யச் சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
20 லட்சம் டன் நிலக்கரியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய ஒப்பந்தப் புள்ளிகளை வரவேற்று மின்வாரியம் இணையத்தளத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இதற்குத் தடை விதிக்கக் கோரித் திருமலைச்சாமி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
வெளிநாட்டு நிறுவனங்கள் டெண்டர் எடுக்கும் வகையில் விதிகளை மாற்றியிருப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, நிலக்கரி இறக்குமதிக்கான டெண்டரை ரத்து செய்ய மறுத்து விட்டார். டெண்டருக்கு மேலும் 15 நாள் காலக்கெடு வழங்கும் அறிவிப்பை இந்திய வர்த்தக இதழில் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.