சாயப்பட்டறை கழிவுகளால் மாசடைந்த நொய்யல் ஆற்றை ஒட்டிய திருப்பூர், கரூர், ஈரோடு, கோவை மாவட்டங்களைச் சேர்ந்த 28 ஆயிரம் விவசாயிகளுக்கு 127 கோடி ரூபாய் இழப்பீட்டை வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, ஆலை உரிமையாளர்களால் டெபாசிட் செய்யப்பட்டு, உயர்நீதிமன்ற வங்கிக்கணக்கில் உள்ள 25 கோடி ரூபாயை தமிழக அரசுக்கு மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளது.
இழப்பீடு கோரியுள்ள அனைவரது மனுவையும் பரீசலித்து, தகுதியான நபர்களுக்கு மே மாதம் 31 ம் தேதிக்குள் இழப்பீடு வழங்கி, அதன் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டுமென தமிழக தலைமை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 8 ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.