பாதுகாப்பு நடைமுறைகளை சரிவர கடைபிடிக்காவிட்டால் மகாராஷ்டிராவிற்கு ஏற்பட்டு உள்ள நிலை தமிழகத்திற்கும் நேரிடும் என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஐதராபாத்தில் உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் தமிழக மக்கள் முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் இருப்பது அதிருப்தி அளிப்பதாக தெரிவித்தார்.
மேலும் சென்னை, கோவை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு ஒரே நேரத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது அதிக அளவில் காணப்படுவதாக தெரிவித்தார்.