வெளிநாடுகளிலிருந்து தமிழக மின் வாரியத்திற்கு நிலக்கரி இறக்குமதி செய்வது தொடர்பான 1330 கோடி ரூபாய் டெண்டருக்கு தடை கோரிய வழக்கில், உத்தவு பிறப்பிக்கும் வரை, அதனைத் திறக்க கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள காரணத்தினால், டெண்டருக்கான கால அவகாசம் 15 நாட்களாக குறைக்கப்பட்டதாகவும், இருப்பினும், அதனை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி புகழேந்தி, வழக்கில் நாளை புதன்கிழமை உத்தரவு பிறப்பிக்க உள்ளதாகவும், அதுவரை டெண்டரை திறக்க கூடாது என்றும் ஆணையிட்டார்.