டாஸ்மாக் மதுபான விற்பனை வருவாய், 30 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, மாநில நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும், தமிழ்நாடு அரசின் கடன் அதிகரிக்கும் போது, மாநில பொருளாதாரமும் உயர்ந்து வருவதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு, மாநில அரசின் வரி விதிப்பு காரணம் அல்ல எனத் தெரிவித்த நிதித்துறைச் செயலாளர், தமிழக அரசின் கடன் அளவு, நிதிக்குழு நிர்ணயித்த குறியீட்டிற்குள் தான் உள்ளதாக கூறினார்.