சேலத்தில் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டவன் ஜாமீன் கிடைக்காத விரக்தியில் சிறையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
நாமக்கல்லைச் சேர்ந்த அசோக்குமார் என்பவன் 17 வயது சிறுமிக்கு கடந்த ஜுன் மாதத்தில் பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்டான்.
இதனையடுத்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவன், பலமுறை தனக்கு ஜாமீன் வழங்கக் கோரியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று, சிறையிலிருந்த பேனிலேயே வேட்டி மூலம் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டான்.