வீடில்லாத ஏழை மக்களுக்கு அரசே சொந்தமாக நிலம் வாங்கி வீடுகட்டிக் கொடுக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், மீன்பிடி துறைமுகம் உட்பட ஆயிரத்து 745 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். முன்னதாக ஒன்றரை கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அம்மா பூந்தோட்ட குளத்தையும் முதலமைச்சர் திறந்துவைத்தார்.
விழாவில் பேசிய முதலமைச்சர், கிராமப்புறத்திலுள்ள வீடில்லாத ஏழை மக்களுக்கு அரசே சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்டிக் கொடுக்கும் என்றும் நகர்புறத்தில் வீடில்லாதவர்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டித் தரப்படும் என்றார்.