சேலம் மாவட்டம் தலைவாசலில், ஆயிரம் ஏக்கர் பரப்பில் சுமார் 1,000 கோடி ரூபாயில் கட்டப்பட்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா மற்றும் கல்லூரியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
சேலம் மாவட்டம் தலைவாசலில் ஆயிரத்து 23 கோடி ரூபாய் மதிப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி திறப்பு விழா நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று, கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரியை திறந்துவைத்தார்.
தலைவாசல் கால்நடை மருத்துவக் கல்லூரி, தேனி கால்நடை மருத்துவக் கல்லூரி, உடுமலை கால்நடை மருத்துவக் கல்லூரி ஆகிய 3 கல்லூரி மாணவர்களுக்கும் சேர்க்கை ஆணைகளையும் முதலமைச்சர் வழங்கினார்.
பிறகு தலைவாசல் தாலுகா உருவாக்குவதற்கான கல்வெட்டையும் முதலமைச்சர் திறந்துவைத்தார்.
கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வரவேற்புரை வழங்க, விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றினார்.
தலைவாசலில் 126 கோடி ரூபாயில் 58 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்த முதலமைச்சர், 181 கோடி ரூபாயில் 58 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.