செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

பிப்ரவரி 30 - ம் தேதி வழங்கப்பட்ட இறப்பு சான்றிதழ்... தவிக்கும் மகன்!

Feb 22, 2021 12:57:08 PM

விருதுநகரில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில், உலகிலேயே இல்லாத ஒரு தேதியைக் குறிப்பிட்டு, இறப்பு சான்றிதழ் வழங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

பிரபல தமிழ்ப்பட நகைச்சுவை காட்சி ஒன்றில், நடிகர் வடிவேலுவிடம், வாங்கிய கடனை எப்போ தருவ என்று கடன்காரர் கேட்கவரும்போது, பிப்ரவரி 30 ம் தேதி தருகிறேன் என்று கூறி அனுப்புவார். அதேபோல ஒரு சம்பவம் விருதுநகரிலும் நடந்துள்ளது,

விருதுநகர் மாவட்டம் பெயம்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அழகர்சாமி. இவர் 2000 ம் ஆண்டு இறந்துவிட்டார். அண்மையில், அழகர் சாமியின் இளைய மகன் உதயகுமார், கடன் வாங்குவதற்காகத் தனியார் வங்கியின் உதவியை நாடியுள்ளார். அப்போது, வங்கி அதிகாரிகள் அவரிடம் வாரிசு சான்றிதழ் கேட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, உதயகுமாரும் வங்கி அதிகாரிகளிடம் வாரிசு சான்றிதழை வழங்கியுள்ளார்.

அதை அதிகாரிகள் சரிபார்த்தபோது, உதயகுமாரின் தந்தை அழகர்சாமி இறந்த தேதி 30.02.2000 என்று குறிப்பிடப்பட்டிருந்தது . இதனைக் கண்ட வங்கி அதிகாரிகள் உதயகுமாருக்குக் கடன் தர மறுத்துவிட்டனர். வாரிசு சான்றிதழ் மட்டும் அல்ல, அழகர் சாமியின் இறப்பு சான்றிதழிலும் அவர் இறந்த தேதி தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, உதயகுமார் தாசில்தார் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதிகாரிகள், உதயகுமாரின் தந்தை அழகர்சாமியின் இறப்பு சான்றிதழ் விரைவில் மாற்றித் தரப்படும் என்று கூறியுள்ளனர்.

உலகிலேயே இல்லாத ஒரு தேதியைக் குறிப்பிட்டு இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம், விருதுநகர் பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement
பழனி அருகே பேருந்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவிகளை மருத்துவமனையில் அனுமதி..
பள்ளி மாணவியை காப்பாற்றிய ஆயுதப்படை காவலர்.!
திருச்சியில் 5 பள்ளிகளுக்கு 3ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்..!
நூலகப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் சேகர் பாபு
கன்னியாகுமரியில் கனமழையால் கரைந்தோடிய புதிதாக போடப்பட்ட இண்டர்லாக் சாலை
வேளச்சேரியில் தொழில் போட்டியால் சக துணிக்கடைக்காரரை கொல்ல முயன்ற கைது
மழை நீர் கால்வாயில் சட்டவிரோதமாக கழிவுநீர் கொட்டடினால் அபராதம் விதிக்கப்படும் மாநகராட்சி அறிவுறுத்தல்
சிவகாசியில் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற பட்டாசுகள் வெடித்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
தேனியில் பழுதான சாலைகள், எரியாத தெருவிளக்குகள், அகற்றாத குப்பைகள்... ஊராட்சி மன்றத் தலைவியிடம் முறையிட்ட பொதுமக்கள்
கிணற்றில் விழுந்து 2 வயது பெண் குழந்தை உயிரிழப்பு... கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவிக்காமல் உடலை புதைத்தது ஏன் ?

Advertisement
Posted Nov 05, 2024 in சென்னை,Big Stories,

50 கிராம் நகைக்காக மூதாட்டியை கொன்று டிராலியில் அடைத்த குடும்பம்..! நெல்லூர் டூ மீஞ்சூர் ரெயில் திகில்..

Posted Nov 05, 2024 in Big Stories,

மாடியில தொட்டிக் கட்டி“காய்கறி தோட்டம் ”நகரத்து பெண் விவசாயி..! வாங்க நாமும் தோட்டம் அமைக்கலாம்

Posted Nov 05, 2024 in உலகம்,Big Stories,

தேர்தலுக்கு தயாராகும் அமெரிக்கா! உலகின் வித்தியாசமான தேர்தல் முறை அதிபர் தேர்வு நடப்பது எப்படி?

Posted Nov 05, 2024 in Big Stories,

எமனாக மாறிய இரும்பு கட்டில்.. தந்தை மகனின் கழுத்தை இறுக்கிய விபரீதம்.. இரும்பு கட்டில் வைத்திருப்போர் கவனத்திற்கு..

Posted Nov 05, 2024 in Big Stories,

கொலை செய்து விட்டு கலெக்டர் ஆபீசுக்கு ஓடிப்போன குண்டு மணி..! இருந்தாலும் ரொம்ப துணிச்சல் தான்..!


Advertisement