கடலூர் மாவட்டம் வடலூர் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் ஒரு வாரத்துக்கும் மேலாக கொள்முதல் செய்யாமல் கிடப்பில் போடப்பட்ட ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமானதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
கொளக்குடியில் இயங்கி வரும் இந்த நெல் கொள்முதல் நிலையத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பு கோட்டகம், மேட்டுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் நெல் மூட்டைகளை கொண்டு வந்திருந்தனர்.
ஆனால் இதுவரை நெல்லை அதிகாரிகள் கொள்முதல் செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளதாகக் கூறும் விவசாயிகள், விடிய விடிய பெய்த மழையில் அத்தனை மூட்டைகளும் நீரில் மூழ்கிவிட்டதாகக் கூறுகின்றனர்.
மூட்டைக்கு 46 ரூபாய் வீதம் லஞ்சம் கேட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். விவசாயிகளின் குற்றச்சாட்டு குறித்து முறையான விளக்கமளிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.