கோவையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 2 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், ஒரு குழந்தையின் இறப்புக்குத் தடுப்பூசி காரணமில்லை என நலவாழ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரோட்டா வைரஸ் என்னும் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு 2 குழந்தைகள் உயிரிழந்தனர்.
இது குறித்து விளக்கம் அளித்த நகர்நல அலுவலர், ஒரு குழந்தை சளியால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாகத் தெரிவித்தார். மற்றொரு குழந்தையை உடற்கூறாய்வு செய்யவிடாமல் பெற்றோர் அடக்கம் செய்துவிட்டதால் இறப்புக்கான காரணம் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார்.
தடுப்பூசி போட்ட குழந்தைகளுக்கு முதல் அரைமணி நேரத்தில் பக்கவிளைவு ஏதும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
குழந்தைகள் இறப்பையடுத்து அதே தொகுப்பில் வந்த தடுப்பு மருந்துகளைக் குழந்தைகளுக்குச் செலுத்துவதை மாவட்ட நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது.