நீலகிரி மாவட்டம் கூடலூரில் பெற்ற மகளுக்கு 3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து, ஊட்டி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கூடலூர் கோத்தர்வயல் பகுதியை சேர்ந்த அப்துல் நாசர் என்பவர், மனைவி வீட்டில் இல்லாத நேரங்களில் தனது 11 வயது மகளுக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இதுகுறித்து அந்த சிறுமி தனது தாத்தாவிடம் கூறியதை அடுத்து, கடந்த 2017-ம் ஆண்டு தந்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தந்தை அப்துல் நாசருக்கு ஆயுள் தண்டனையும் 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்பளித்தார்.