தருமபுரி மாவட்டத்தில் புதிதாக வேளாண் கல்லூரி தொடங்கவுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த கல்லூரி நடப்பு கல்வியாண்டில் இருந்தே அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கும்முனூர் கிராமத்தில் 37 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் வேளாண் மற்றும் தோட்டக்கலை பட்டயப்படிப்புகளுக்கான புதிய கல்லூரிக்கு, நான்கரை கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்லூரி தற்காலிகமாக, மல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும். மாணவர் சேர்க்கை, உதவி பேராசிரியர்கள் நியமனம் உள்ளிட்ட பணிகளை வேளாண் பல்கலைக்கழகம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.