தமிழ்நாட்டில், 54 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, மாநில அரசு அறிவித்துள்ளது. சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர், சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாநகர காவல் ஆணையராக அன்பு நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் மாநகர காவல் ஆணையராக சந்தோஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அரியலூர் எஸ்.பி.யாக பாஸ்கரன், தூத்துக்குடி எஸ்.பி.யாக மணிவண்ணனும், பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய ஐஜியாக தீபக் எம் தாமோரும், சிபிசிஐடி ஐ.ஜி.யாக, தேன்மொழியும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகர தெற்கு கூடுதல் காவல் ஆணையராக கண்ணனும், கோயம்புத்தூர் மேற்கு மண்டல ஐ.ஜி.யாக தினகரனும், நியமிக்கப்பட்டுள்ளனர்.