அஞ்சல் வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் வாக்காளர் பட்டியல் எப்போது அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாகப் பதிலளிக்கத் தேர்தல் ஆணையத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் அறிவித்த பிறகு தான், அஞ்சல் வாக்குப் பதிவு செய்ய விண்ணப்பங்கள் வழங்கப்படும் எனவும், அதைப் பரிசீலித்துத் தேர்தல் அதிகாரிகள் முடிவெடுத்த பிறகு தான் அந்தப் பட்டியல் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் எனவும் தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
அஞ்சல் வாக்குப் பதிவு செய்ய எப்போது விண்ணப்பம் பெறப்படும், எப்போது அதன் மீது முடிவெடுக்கப்படும், எப்போது அந்தப் பட்டியல் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் என விரிவாக பதிலளிக்கத் தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.