மதுரை சிம்மக்கலில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ஒன்பதரை அடி உயரத்தில், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்ட இந்த கருணாநிதியின் சிலை, தமிழகத்திலேயே முதன்முறையாக பொது இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
பின்னர், பேசிய மு.க.ஸ்டாலின், தந்தையின் சிலையை திறந்து வைத்த தருணம் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்ததாக குறிப்பிட்டார். இன்னும் 3 மாதத்தில் கலைஞரின் கனவு நிறைவேறப் போவதாகவும் சூளுரைத்தார்.