உரிமையாளரை தாக்கி, காரை கடத்திச் சென்ற இருவர், வீட்டின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதோடு, கடத்தப்பட்ட கார் என அடையாளம் தெரியாமல் இருக்க நம்பர் பிளேட்டை கழற்றி எடுத்துச் சென்ற சம்பவம் கன்னியாகுமரியில் நடைபெற்றுள்ளது.
மார்த்தாண்டத்தைச் சேர்ந்த பிபின் ஸ்டாலின் என்பவரை, நேற்றிரவு வழிமறித்து தாக்கிய 2 பேர், அவரது காரை கடத்திச் சென்றுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
செல்லும் வழியிலேயே கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் காம்பவுண்டு சுவரில் மோதி விபத்து ஏற்படுத்திய அவர்கள், நம்பர் பிளேட்டை கழற்றி எடுத்துக் கொண்டு தப்பிவிட்டனர்.
காருக்குள் இருந்த பர்சை வைத்து அதன் உரிமையாளரை கண்டுபிடித்த போலீசார், விபத்து ஏற்படுத்திய கார் கடத்தப்பட்டதை கண்டறிந்தனர். மேலும், காரை கடத்திச் சென்ற அபிலாஷ் என்ற இளைஞரையும் கைது செய்தனர்.