கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதன், இன்று சிறப்பு பிராத்தனையுடன் தொடங்கியது.
இயேசு சிலுவையில் அடையப்பட்ட போது அவர் பட்ட துன்பங்களை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை அனுசரிக்கின்றனர். இயேசு உயிர்தெழுந்த தினமான ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாக கடை பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தவக்காலம் சாம்பல் புதன் நாளான இன்று தொடங்கியது. இதையொட்டி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலுள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சாந்தோம் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது தவக்காலத்தை தொடங்கினர். கொரோனா காரணமாக, பக்தர்களுக்கு நெற்றியில் சாம்பல் வைக்கப்படாமல், கையில் பொட்டலமாக வழங்கப்பட்டது.
உலக புகழ்பெற்ற பூண்டி மாதா பேராலயத்தில் கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறன்று பயன் படுத்திய குருத்து ஓலையை எரித்து அந்த சாம்பலை பக்தர்கள் நெற்றியில் வைத்து பங்கு தந்தையர்கள் தவ காலத்தை துவக்கி வைத்தனர்.
உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற சாம்பல் புதன் சிறப்பு திருப்பலியில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று, 40 நாள் தவக்காலத்தை தொடங்கினர்.
சாம்பல் புதனை ஒட்டி, தூத்துக்குடி திரு இருதய தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏரளமானோர் பங்கேற்றனர்.
பிரசித்தி பெற்ற கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் பக்தர்கள் சாம்பல் பூசிக் கொண்டு தவ காலத்தை தொடங்கினர்.