விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அடுத்த அச்சங்குளத்திலுள்ள பட்டாசு ஆலையில் நிகழ்ந்த கோர விபத்து தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
அச்சங்குளம் கிராமத்தில் இயங்கி வந்த மாரியம்மாள் பட்டாசு ஆலையில், கடந்த 12ம் தேதி ஏற்பட்ட கோர விபத்தில், இதுவரை 20 பேர் உயிரிழந்ததுடன், படுகாயமடைந்த 26 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக, பட்டாசு ஆலை உரிமையாளர் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்த ஏழாயிரம்பண்ணை போலீசார், குத்தகைதாரர்களான பொண்ணுபாண்டி, சக்திவேல் ஆகியோரை ஏற்கனவே கைது செய்த நிலையில், சக்திவேலுவின் மனைவி ஜெயராமுவை இன்று கைது செய்தனர்.