செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரியைத் தூர்வாரிக் கரையை வலுப்படுத்தும் பணிக்கு 120 கோடியே 23 லட்ச ரூபாயைத் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழகத்தில் இரண்டாவது பெரியதும், செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரியதுமான மதுராந்தகம் ஏரி மூலம் 2854 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. 125 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ஏரியைத் தூர்வாரிக் கரைகள் வலுப்படுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி 120 கோடியே 23 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.