பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிராக திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலால் வரியை ரத்து செய்து விலை குறைப்பு நடவடிக்கைகளை உடனடியாக மத்திய பாஜக அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்பாட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.