செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கொடைக்கானல் : புதுமண தம்பதியுடன் படகு சவாரியில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

Feb 17, 2021 01:19:43 PM

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில்,  படகு சவாரியின் போது தடையை மீறி பட்டாசு வெடித்த புதுமண தம்பதியனரின் வீடியோ காட்சிகள்  இணையத்தில் வைரலாகி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வெளி மாநிலங்களில் இருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். அப்படி , கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் விரும்பி பார்க்கும் இடமாக படகு குழாம் உள்ளது. இங்கு,  தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் நகராட்சி சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.

நேற்று மாலை ஏரி அருகேயுள்ள  நட்சத்திர விடுதியில் திருமண  நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக , சுற்றுலா வளர்ச்சி கழக படகை திருமண வீட்டார் வாடகைக்கு எடுத்திருந்தனர். படகில் மணமக்களை அழைத்து செல்வதற்காக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

இதன்பின் , மணமக்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் படகு சவாரியில் சென்றபோது, புஷ்வாணம்,கம்பிமத்தாப்பு, சங்கு சக்கரம் உள்ளிட்ட மத்தாப்புக்களை படகிலேயே கொளுத்தி கொண்டாடியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை,  மற்ற சுற்றுலாப்பயணிகள்  வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதால் வைரலானது.  இது பற்றி  தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக படகு குழாம் மேலாளர், தடையை மீறி நட்சத்திர ஏரியில் படகுசவாரியின் போது  பட்டாசுகள் பயன்படுத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

படகு சவாரி செல்லும்போது பாதுகாப்பு உபகரணங்கள் மட்டுமே அணிந்து செல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளனர்.  ஆனாலும்  தடையை மீறி  செய்யப்பட்டு வெடி பொருள்களை  எடுத்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுப்போன்ற தவறான செயல்களில் ஈடுபடுவோர்  மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என  சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


Advertisement
கல்லூரி பேருந்து சாலையோர மரத்தில் மோதி விபத்து ..
தேனீக்கள் வளர்ப்பது இவ்வளவு சுலபமா..? மாதம் ரூ.50 ஆயிரம் லாபம்..! ஒரு நாள் பயிற்சி தர்ராங்க..
மூடப்படாத குடிநீர் பைப் பள்ளம் - விபத்தில் சிக்கி பச்சிளம் குழந்தை உயிரிழப்பு.
கை கொடுக்கும் காளான் வளர்ப்பு.. வாய்ப்பை வழங்கும் வேளாண் பல்கலை..
மதுரையில் மங்கி குல்லா கொள்ளையர்கள் கைவரிசை - சி.சி.டி.வி காட்சி வெளியீடு
புத்தக வெளியீட்டு விழாவில் விஜயுடன் பங்கேற்பது குறித்து ஆலோசித்து முடிவு - திருமா
விசாரணைக்கு அழைத்த நபர் வர மறுத்ததால் அடித்து,உதைத்த காவலர் இடமாற்றம் ..
8 செ.மீ மழையை தாங்கும் வகையில் வடிகால் அமைப்பு உள்ளன - அமைச்சர் கே.என்.நேரு
பழனி அருகே பேருந்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவிகளை மருத்துவமனையில் அனுமதி..
பள்ளி மாணவியை காப்பாற்றிய ஆயுதப்படை காவலர்.!

Advertisement
Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தேனீக்கள் வளர்ப்பது இவ்வளவு சுலபமா..? மாதம் ரூ.50 ஆயிரம் லாபம்..! ஒரு நாள் பயிற்சி தர்ராங்க..

Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கை கொடுக்கும் காளான் வளர்ப்பு.. வாய்ப்பை வழங்கும் வேளாண் பல்கலை..

Posted Nov 05, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

50 கிராம் நகைக்காக மூதாட்டியை கொன்று டிராலியில் அடைத்த குடும்பம்..! நெல்லூர் டூ மீஞ்சூர் ரெயில் திகில்..

Posted Nov 05, 2024 in Big Stories,

மாடியில தொட்டிக் கட்டி“காய்கறி தோட்டம் ”நகரத்து பெண் விவசாயி..! வாங்க நாமும் தோட்டம் அமைக்கலாம்

Posted Nov 05, 2024 in உலகம்,Big Stories,

தேர்தலுக்கு தயாராகும் அமெரிக்கா! உலகின் வித்தியாசமான தேர்தல் முறை அதிபர் தேர்வு நடப்பது எப்படி?


Advertisement