2009-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்ற வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அந்த தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பனை விட 3 ஆயிரத்து 354 வாக்குகள் அதிகம் பெற்று ப.சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி ராஜ கண்ணப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த அக்டோபர் மாதம் ஒத்திவைத்தது. இந்நிலையில், வழக்கில் இன்று தீர்ப்பு அளித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, கடந்த 2009 -ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும் என தீர்ப்பளித்தார்.