தமிழகத்தில் சின்ன வெங்காயம் விலை கடந்த 10 நாட்களில் இரு மடங்காக உயர்ந்துள்ளது.திண்டுக்கல் வெங்காய சந்தைக்கு, நாள் ஒன்றுக்கு சராசரியாக 8000 மூட்டைகள் விற்பனைக்கு வந்தநிலையில், இப்போது 2000 மூட்டைகளே வருவதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.
இதன் காரணமாக கடந்த மாதம் 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சின்ன வெங்காயம், தற்போது 145 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மதுரையில் சில்லறை விற்பனையில் சின்ன வெங்காயம் 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
திருச்சியில் 120 ரூபாய்க்கும், கோவையில் 170 ரூபாய்க்கும், சென்னை கோயம்பேடு சந்தையில் 130 ரூபாய்க்கும் சின்ன வெங்காயம் விற்பனையாகிறது. அதிக மழை காரணமாக விளை நிலங்களில் வெங்காயம் அழுகிவிட்டதே விலை உயர்வுக்கு காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.