தஞ்சாவூரில் குரங்குகள் தூக்கிச் சென்ற பச்சிளங்குழந்தை உயிரிழந்ததை அடுத்து, நகரின் பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரியும் குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
2 நாட்களுக்கு முன், பிறந்து 8 நாட்களே ஆன, பச்சிளங் இரட்டைக் குழந்தைகளை குரங்குகள் வீடு புகுந்து தூக்கிச் சென்றன. ஒரு குழந்தை உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மற்றொரு குழந்தை அகழியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது.
இதனையடுத்து, நகர் பகுதிகளில் சுற்றித்திரியும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். குரங்குகளுக்கு பிடித்தமான உணவுகளை கூண்டுக்குள் வைத்து பிடித்து வருகின்றனர்.
இதுவரை 25 குரங்குகள் சிக்கியுள்ளன. பிடிபட்ட குரங்குகளை பச்சைமலை காட்டில் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.