கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மது அருந்த கூடாது என்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் கருத்துகள் தவறானவை எனக் கூறியுள்ள சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், இரண்டாம் தவணை தடுப்பூசியை எடுத்துக் கொள்ள தவறினால் நோய் எதிர்ப்பு சக்தி உருவாக தாமதமாகும் என தெரிவித்துள்ளார்.
இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்ட பிறகு சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.