தொல்லியல் துறை சார்பில் கீழடி அகழாய்வின் 7ம் கட்டப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சர் மாபா பாண்டியராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர் கடந்த 2014 -- 2015ல், மத்திய தொல்லியல் துறை முக்கிய தொல்பொருட்களைக் கண்டறிந்த பின் அகழாய்வைக் கைவிட்டது.
தொடர்ந்து, தொல்லியல் ஆலோசனை வாரிய நிலைக் குழுவான, 'கபா'வின் அனுமதியைப் பெற்று, 2016 --2017ல், தமிழக தொல்லியல் துறை அகழாய்வைத் தொடங்கியது.இதன்படி, கீழடியின் ஏழாம் கட்ட அகழாய்வை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.