12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் நடத்துவது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து அறிவிக்கப்படும்.
என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார்.
மத்திய அரசின் நீட், ஜேஇஇ போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி தரும் அளவுக்கு அரசு பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை என்பதால் தனியார் மூலம் ஆன்லைனில் மட்டுமே பயிற்சி அளிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
கல்வி டிவி மூலம் பயின்ற மாணவர்களின் கல்வித்தரம் பற்றி ஆராய திறனாய்வு தேர்வு நடைபெறுவதாக அவர் கூறினார்.