தமிழகத்தில் இதுவரை அனுமதி வழங்கப்பட்டுள்ள சவுடு மணல் குவாரிகளின் விவரங்களை 8 வாரங்களுக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய கனிமவளத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதிகள் அமர்வு, தமிழகத்தில் எங்கு மணல் குவாரிகள் நடத்த அனுமதி கோரப்பட்டாலும், அந்த இடத்திலிருக்கும் மாதிரியை ஆய்வுக்கு உட்படுத்தி, கனிமங்கள் குறித்து விபரத்தை பெற்ற பின்னரே அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதற்கென கனிமவள துறையினர் தனியாக ஆய்வகங்கள் அமைக்க வேண்டும் என்ற நீதிபதிகள், கனிம வளம், நீர்வளம், பொதுப்பணி உள்ளிடோரை கொண்ட உயர்மட்டக் குழுவை அமைத்து கண்காணிக்கவும் அறிவுறுத்தினர்.