டெல்டா மாவட்டங்களில், காவிரி துணை ஆறுகளை மேம்படுத்த 3159 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பாசன அமைப்புகளை விரிவுபடுத்துதல், புதுப்பிதல், நவீனப்படுத்துதல் திட்டத்தின் கீழ், 15க்கும் மேற்பட்ட காவிரி துணை ஆற்றுப் படுகைகளில் 31 திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
காவிரியின் துணை ஆறுகளில் தடுப்பணைகள், மதகுகள், தடுப்புச்சுவர்கள் உள்ளிட்டவை கட்டப்பட்டு, பருவமழைக் காலத்தில தண்ணீரை சேமிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு பணியினை முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தவிடப்பட்டுள்ளது.
நபார்டு வங்கியின் கடனுதவியுடன் இந்தப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு, அதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.