கொரோனா தடுப்பூசிகள் முறையாக போடப்படுவதாக கூறியுள்ள தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை, அவை ஒருபோதும் வீணாக்கப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளது.
முதற்கட்ட கொரோனா தடுப்பூசி இயக்கத்தின்போது, 25 ஆயிரம் டோஸ் அளவிற்கு மருந்துகள் வீணானதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ள, பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம், தடுப்பூசி மருந்துகள் 10 பயனாளிகளுக்கு செலுத்தும் விதமாக 10 "டோஸ்" கொண்ட மருந்து பாட்டில்களில் வந்துள்ளதாக கூறினார்.
ஒரு முறை பாட்டிலை திறந்தால், 4 மணி நேரத்திற்குள், 10 பேருக்கு தடுப்பூசி போட்டுவிட வேண்டும் என்றார். பயனாளர்கள் அவர்களுக்குரிய நேரத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்படுவதாகவும், ஒருசிலர் வராதபோது, சில டோஸ்கள் வீணாகிவிடுவதாகவும், அது ஆயிரக்கணக்கில் அல்ல என்றும், பொதுசுகாதாரத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.