தமிழகத்தில் பிரசித்திபெற்ற அனைத்து கோவில்களின் பிரசாதங்களையும் தபால் மூலம் பக்தர்களின் வீட்டிற்கே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவில் மலை மீது 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 135 அடி உயர முருகன் சிலை அமைக்கும் பணிகளின் தொடக்க விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார்.
அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை படிப்படியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.