நாமக்கல் மண்டலத்தில் கடந்த 3 நாட்களில் முட்டை விலை 30 காசுகள் உயர்ந்து 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நாள்தோறும் முட்டை விலையை நிர்ணயித்து வரும் நிலையில், கடந்த 8 ஆம் தேதி 10 காசுகள் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், இன்று 20 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் காரணமாக முட்டை உற்பத்தி 10 சதவீதம் குறைந்துள்ளதால் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.