சசிகலாவின் சொத்துகளை முடக்குவதில் அரசியல் உள்நோக்கம் கிடையாது என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விளக்கமளித்துள்ளார்.
நாகை மாவட்டம் நாகூர் புதிய பேருந்து நிலையத்தில் ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள, யாத்ரீகர்கள் தங்கு விடுதிக்கு அடிக்கல்லை நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
முன்னதாக, புரேவி புயலால் இடிந்து சேதமடைந்த நாகூர் தர்கா குளத்தின் சுற்றுச்சுவர்களை, 4.34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணியை அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன் மற்றும் வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து தர்கா குளம் அருகே நடைபெற்ற சிறப்பு தொழுகையில் அமைச்சர்கள் இருவரும் கலந்து கொண்டனர்.