செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

நாட்டுப்புற பாடலை சுட்ட சூப்பர் சிங்கர் செந்தில் ராஜலெட்சுமி..! பாடகி கண்ணீர் மல்க புகார்

Feb 11, 2021 12:52:30 PM

நாட்டுபுறப்பாடகி மதுரமல்லி என்பவரால் இயற்றி பாடப்பட்டு, யூடியூப்பில் 2 கோடி முறைக்கும் அதிகமாக பார்க்கப்பட்ட கிராமியப் பாடலைத் திருடி, கோவில் விழாக்களில் பாடிய சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ், ராஜலெட்சுமி தம்பதி, அந்த பாடலை தங்கள் தோழி இயற்றியதாகக் கூறி பொய்யான பரப்புரையில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.

நாட்டுபுற கவிஞர் செல்லதங்கையா என்பவரின் பாடல்வரிகளுக்கு உணர்வு பூர்வமான குரல் மூலம் உயிர் கொடுத்து பாடி பிரபலமான சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் - ராஜலெட்சுமி தம்பதி மீது தான் இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரமல்லி என்ற புனைப் பெயரில் பாடல்களை இயற்றி பாடிவரும் டாக்டர் கலைச்செல்வியின் மாமான்னு கூப்பிடத்தான் மனசு சொல்லுது என்ற வீடியோ பாடல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர் சிங்கர் செந்தில் ராஜலெட்சுமியின் கிராமிய பாடல்களை விஞ்சும் அளவிற்கு யூடியூப்பில் 2 கோடி முறைக்கும் அதிகமாக பார்க்கப்பட்டு ஹிட் அடித்தது.

இந்த நிலையில் அண்மையில் நடந்த கோவில் விழா மேடைக்கச்சேரி ஒன்றில், மாமான்னு கூப்பிடத்தான் மனசு சொல்லுது என்ற பாடலை தனது தங்கை என்று கூட்டத்தினரால் அழைக்கப்படும் கலைவாணி என்பவர் இயற்றி பாடியதாக ராஜலெட்சுமி பேசியது தான் இந்த பிரச்சனைக்கு மூலக்காரணம்..!

அந்தபாடலை இயற்றி பாடியதற்கு ஆதரமாக யூடியூப்பில் இன்றளவும் அந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், ராஜலட்சுமி யாரோ ஒரு பெண்ணை வைத்து அந்த பாடலுக்கு சொந்தம் கொண்டாடுவது கீழ்த்தரமானது என்று கண்டனம் தெரிவித்தார் கிராமியப் பாடகி மதுர மல்லி.

ராஜலட்சுமி தவறான கருத்தை வாபஸ் பெறவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்கிற அளவுக்கு பாடகி மதுர மல்லி கடுமையான மன உளைச்சலுடன் வீடியோ வெளியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

சாதாரண நிலையில் இருந்து மக்கள் கொடுத்த ஆதரவால் புகழ் ஏணியின் உச்சிக்கு சென்றிருக்கும் நாட்டுப்புற பாடகர் தம்பதியரான செந்தில் ராஜலெட்சுமி ஆகியோர் பாடலை சுட்டதற்கு மன்னிப்பு கேட்பார்கள், நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காவல்துறையில் புகார் அளித்து விட்டு கண்ணீர் மல்க காத்திருக்கிறார் கிராமிய பாடகி மதுர மல்லி..!

சினிமாவில் கதை திருடர்கள் தொல்லை என்றால் இந்த சம்பவத்தின் மூலம், நாட்டுப்புற பாடல்களில் அரங்கேறும் கவிதை திருட்டு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதனிடையே தன் மீதான புகாரை முற்றாக மறுத்துள்ள நாட்டுப்புற பாடகி ராஜலட்சுமி அதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளார். 

 


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement