சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படியே, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரது சொத்துகள் அரசுடமையாக்கப்பட்டு வருகின்றன.
சொத்துக்குவிப்பு வழக்குத் தொடர்பாக, பெங்களூரு தனி நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், 254 சொத்துகள் இணைக்கப்பட்டிருந்தன. இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஜெயலலிதா சம்பந்தப்பட்ட சொத்துகளை பட்டியலிலிருந்து நீக்கியதோடு, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பாத்தியப்பட்ட 128 சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவிட்டது.
இதற்கும், இவர்கள் மூவரும் செலுத்தும் அபராத தொகைக்கும் ஈடானது அல்ல என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், 128 சொத்துகளும், அதிகார துஷ்பிரயோகம் மூலம் சேர்த்த சொத்துகள் என்பதால், அவற்றை மாநில அரசு பறிமுதல் செய்ய வேண்டும் என தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது. அதன் அடிப்படையில்தான் தற்போது அவர்களின் சொத்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளன.