காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி, வருகிற 14 ஆம் தேதி, காணொலி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.இத்தகவலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில், நாசரேத் அருகே உள்ள மதயாணிபட்டி கிராமத்தில் புதிய தடுப்பணைக் கட்டும் பணிக்கு, அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
அப்போது, காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம் 100 ஆண்டுகால கனவு திட்டம் என, அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.