தமிழகத்தில் வேலையின்மை அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்புகளை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பெரம்பூரில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற 170 மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
முன்னதாக, நிகழ்ச்சியில் பேசிய அவர், அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் இதுவரை 348 பேர் பயிற்சி பெற்றுள்ளனர் என்றார். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி தொடங்கப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.