குரூப் 1 முதல் நிலைத் தேர்வு முடிவுகளை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அவ்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த ஜனவரி 3 ஆம் தேதி நடைபெற்ற, குரூப் 1 தேர்வுக்கான முடிவுகள் இன்று www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வெற்றி பெற்றவர்களுக்கான முதன்மை தேர்வு வருகின்ற மே மாதம் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், தேர்வை எழுத தகுதி பெற்றோர், வரும் 16-ம் தேதி முதல் மார்ச் 15-ம் தேதிக்குள், தங்களின் சான்றிதழ்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து, தேர்வுக் கட்டணமாக ரூ.200-ஐ செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.