நீட் தேர்வு ஓ.எம்.ஆர். விடைத்தாளில் முறைகேடு நடந்துள்ளதாக கோயம்புத்தூர் மாணவர் தொடர்ந்துள்ள வழக்கை சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு ஏன் மாற்றக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் வினவியுள்ளது.
இதுதொடர்பான வழக்கு, நீதிபதி புகழேந்தி முன்பு, மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாணவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேசிய தேர்வு முகமையின் குளறுபடியால் மாணவர் பலிகடா ஆகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த வழக்கில், சைபர் குற்றங்களை கண்டறிவதில் நிபுணத்துவம் பெற்ற சிபிஐ அதிகாரிகள் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு பிரிவை அமைக்கலாமா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
முதலில் மாணவர் மீது முறைகேடு புகார் தெரிவித்த தேசிய தேர்வு முகமை, நீதிபதியின் கேள்வியைத் தொடர்ந்து, சிறப்பு புலனாய்வு விசாரணை நடத்தினால், தவறான பிம்பம் ஏற்படும் என கூறியது.
வழக்கு விசாரணை வரும் பிப்ரவரி 18ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.