வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் அதிவேகமாக கார் ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்திய நபரிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
காரில் அதிவேகமாக சென்ற அஜிஸ் என்பவரை பொதுமக்கள் பின்தொடர்ந்து சென்ற போது சாலையோரம் இருந்த தடுப்புச்சுவர் மீது அந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. பின்னர் பொதுமக்கள் அந்த நபரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விபத்தில் சிக்கிய காரில் இருந்து அதிநவீன கைத்துப்பாக்கி, 2 வீச்சரிவாள் மற்றும் போலி நம்பர் பிளேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்துக்காக வேலூர் மாவட்டம் சென்ற நிலையில் கைத்துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.