அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா மீது நடத்தப்பட்டு வரும் விசாரணையை முடிக்க மேலும் 3 மாதம் கால அவகாசம் கேட்டு தமிழக அரசுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் கடிதம் எழுதியுள்ளார்.
சுரப்பா மீது கூறப்படும் 280 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, நவம்பர் மாதம் முதல் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டதில் பல்வேறு முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளதால் விசாரணை குழு சார்பில் கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து துணைவேந்தர் சூரப்பாவிற்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் விசாரணை குழு திட்டமிட்டுள்ளது.
இது தமிழக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையா என தெரியவில்லை என்றும், தன் மீதான புகார்களில் உண்மை இல்லை என்றும் ஏற்கனவே சுரப்பா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.