தமிழகத்தில் 9 ஆம் தேதி முதல் காவல்துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்பினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச வலிப்புநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார். 8.82 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாகவும், 20ம் தேதிக்குள் சுகாதார பணியாளர்கள் முழுமையாக தடுப்பூசியினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள சுகாதாரப் பணியாளர்கள் அச்சமின்றி முன்வர வேண்டுனெவும் அவர் கோரிக்கை விடுத்தார்.