செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

' சேதமடைந்த குடிசையும் கூழும்தான் வாழ்க்கை! ' - பரிதாப நிலையில் 'பரியேறும் பெருமாள்' தங்கராசு

Feb 08, 2021 04:52:39 PM

'பரியேறும் பெருமாள்' படத்தில் நடிகர் கதிரின் தந்தையாக நடித்த நாட்டுப்புற கலைஞர் தங்கராசு வசிக்க ஒரு நல்ல வீடு கூட இல்லாத நிலையில், அவதிப்படுகிறார். இதையடுத்து, அவரின் வீட்டை சீரமைத்து தர நெல்லை மாவட்ட ஆட்சியர் முன் வந்துள்ளார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படம் செம ஹிட்டாகியது. இந்த படத்தில் நடிகர் கதிரின் தந்தையாக நடித்தவர்தான் நாட்டுப்புற கலைஞர் தங்கராசு. சுமார் 40 ஆண்டுகளாக பெண் வேடம் கட்டி நாட்டுப்புற கலைஞரான நடித்தவர் தங்கராசு. அவரின் திறமையை அறிந்தே மாரி செல்வராஜ் தன் முதல் படத்தில் நடிக்க அவர் வாய்ப்பு அளித்திருந்தார். தமிழகத்தில் பட்டி தொட்டியெல்லாம் ஹிட்டான படத்தில் நடித்திருந்தாலும், தங்கராசுவின் வாழ்க்கை மாறி விடவில்லை.

ஏழை நாட்டுப்புற கலைஞரான அவர் தன் மனைவி பேச்சிக்கனியுடன் எளிய சிதிலமடைந்த கூரை வீட்டில்தான் வசிக்கிறார். நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள இளங்கோ நகரில் தங்கராசுவின் சிதிலமடைந்த வீடு உள்ளது. நாட்டுப்புற கலைகள் எந்த கலைஞனுக்கும் வாயிறார சாப்பாடு போடுவதில்லை. நாட்டுப்புற கலைஞன் வேறு ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட்டதால்தான் தன் குடும்பத்தை நடத்த முடியும். அதற்கு, தங்கராசுவும் விதிவிலக்கல்ல. வெள்ளக்காய், பனங்கிழங்கு, எலுமிச்சை பழ விற்பனையில் ஈடுபடுவது தங்கராசுவின் வழக்கம்.

இதற்கிடையே, கடந்த ஒரு ஆண்டு காலமாக கொரானா பாதிப்பால் தங்கராசுவின் பழ விற்பனையும் முடங்கிப் போனது. பணமிருந்தால் ஒரு வேளை உணவு இல்லையென்றால் கூழ் இதுதான் தங்கராசு அவரின் மனைவி பேச்சிக்கனியின் வயிற்றை நிரப்பும். வறுமையின் நிறம் சிவப்பு படத்தின் கதை அப்படியே இந்த கலைஞனுக்கு பெருந்தும் எனறாலும் மிகையில்லை.

சமீபத்தில் நெல்லை மாவட்டத்தில் கொட்டிய கன மழை வேறு ஏற்கனவே இடிந்து போயிருந்த தங்கராசுவின் வீட்டை தன் பங்குக்கு சிதைத்து போட்டு விட்டது. வீட்டுக்கு கதவும் இல்லை... ஜன்னல் கிடையாது. தங்கராசுவுக்கு டீச்சர் டிரெயினிங் படித்த மகளும் உண்டு. தற்போது, எம்.ஏ அஞ்சல் வழி படித்து வரும் மகளை கதவு இல்லாத வீட்டில் எப்படி வாழ வைக்க முடியும். எனவே, திருச்செந்தூரிலுள்ள உறவினர் வீட்டில்  தங்க வைத்துள்ளார் இந்த ஏழை தந்தை.

தங்கராசுவின் ஏழ்மை நிலை குறித்து, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவின் கவனத்துக்கு கொண்டு சென்றது. இதையடுத்து, தாசில்தார் ஒருவரை அனுப்பி தங்கராசுவின் வீட்டை ஆய்வு செய்து சரி செய்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை பெற்றுள்ளார். விரைவில், தங்கராசு அவர்களின் பழுதான வீட்டை சரிசெய்வதோடு, அவரின் மகளுக்கும் தனியார் பள்ளியில் வேலை வாங்கி தருவதாகவும் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.

 இது குறித்து தங்கராசு கூறுகையில்,'' என்னோட 17 வயதில் தெருக் கூத்தாட்டத்துக்கு வந்தேன். என்னால் என் பிள்ளையை நன்றாக படிக்க வைக்க முடிந்தது. அதுக்கு மேல என்னால எதுவும் என் மகளுக்கு செய்து விட முடியவில்லை. என் வீட்டில் மின் இணைப்பு கூட இல்லை. மண்ணெண்ணெய் விளக்கில்தான் வசிக்கிறோம்.  இப்போது 65 வயதாகி விட்டதால் என்னால் தெருக் கூத்து ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டேன். எனக்கு இந்த வீட்டை கட்டிக் கொடுத்தால் நன்றாக இருக்கும்'' என்கிறார்.


Advertisement
வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்த இருவர் கைது.!
மழையால் சேறும் சகதியுமான கிராமச் சாலை - நாற்று நட்டு மக்கள் எதிர்ப்பு
லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகளுக்கு 2 ஆண்டு சிறை..
கும்பகோணத்திலிருந்து மீண்டும் காஞ்சி வந்தடைந்த ஏகாம்பரநாதர் கோயில் சிலைகள் .!
வேளாண்துறை அதிகாரிகளை சிறைபிடித்த கல்குவாரி ஊழியர்கள்.!
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு.!
"இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை" - யு.ஜி.சி தலைவர்
கைதியை அழைத்துச் செல்லும் போது போலீஸ் வாகனத்தில் மது அருந்திய எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட்
தடுப்பூசி போட்டுக்கொண்ட 10 மாதக் குழந்தை உயிரிழப்பு.. பெற்றோர் குற்றச்சாட்டு..!
மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - டி.ஜி.பி எச்சரிக்கை

Advertisement
Posted Nov 15, 2024 in சென்னை,Big Stories,

எலிக்கு வைத்த மருந்து.. இரு குழந்தைகள் பலி.. பெஸ்ட் கண்ட்ரோல் செய்தது சரியா? வங்கி மேலாளார் வீட்டில் நடந்தது என்ன ?

Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்

Posted Nov 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”


Advertisement