சென்னை மீஞ்சூர் - வண்டலூர் இடையே 1025 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ஆறு வழிச்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு, மீஞ்சூர் முதல் 30.50 கிலோ மீட்டர் தூரத்தில் வண்டலூர் வரையில் ஆறு வழிச்சாலை அமைக்கப்பட்டது.
இந்த ஆறுவழிச் சாலையை திறந்து வைத்த முதலமைச்சர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை வளாகத்தில் 121.80 கோடியில் புதிதாக கட்டப்படவுள்ள 6 தளங்கள் கொண்ட கட்டிடத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 110 கிலோ வாட் அளவுக்கு மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்டதாக தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி மூலம் திறந்து வைத்தார்.
கருவூலத்தில் பெறப்படும் அரசின் வருவாயை மின்னணு முறையில் பெற்றுக்கொள்ளும் வசதியையும் அவர் துவக்கி வைத்தார்.